ராஜா ராணி 2 சீரியலை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர் ரசிகர்கள்.

Fans Trolls Raja Rani2 Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அந்த சீரியலில் சித்து நாயகனாக நடிக்க ஆல்யா மானசா நாயகியாக நடித்து வருகிறார். தற்போது சமையல் போட்டிக்காக சரவணன் சென்னை சென்று உள்ள காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடு சரவணன் ஆசைப்பட்ட அதற்கு காரணமாக சந்தியா குடும்பத்தார் அனைவரையும் ரகசியமாக வரவைத்து சரவணனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். குடும்பத்தினர் அனைவரையும் பார்த்த சந்தோஷத்தில் சரவணன் சந்தியாவை தூக்கிக்கொண்டு ரொமான்ஸ் செய்தார்.

இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் நாளுக்கு நாள் ராஜா ராணி சீரியல் ரொமான்ஸ் அதிகரித்துக்கொண்டே செல்வதாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனே ஆலியா மானசாவுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் தற்போது வேற அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் இது போன்ற காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சீரியலை கழுவி ஊற்றி வருகின்றனர்.