Fans Trolls on Annathae Single Track

ரஜினி பட பாட்டை சுட்டு அண்ணாத்த படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை உருவாக்கியுள்ளார் டி இமான் என சர்ச்சை கிளம்பியுள்ளது.

Fans Trolls on Annathae Single Track : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியானது.

முறைகேடான நிதி முதலீடு : பட்டியலில் சச்சின் பெயர்

எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் வெளியான 16 மணி நேரங்களில் இருபத்தி எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பாடலை கேட்டு ரசித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் இமான் அவர்கள் படையப்பா படத்தில் இடம்பெறும் என் பேரு படையப்பா பாடலை ஆட்டையை போட்டு இந்த பாடலின் மெட்டை உருவாக்கியிருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Chennai-யில் 40000 பிரியாணி கடை வந்ததற்கு நான் தான் காரணமா? – Salem RR Biryani Tamilselvan Speech

இந்த இரண்டு பாடலின் பின்னணி இசையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதிலும் இன்னொரு கூடுதல் விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு பாடலையும் பாடியிருப்பார் எஸ்பிபி பாலசுப்ரமணியம் தான்.

இதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்தில் டி இமான் இசையில் வெளியான வேட்டி கட்டு பாடல் வெளுத்துக்கட்டு வெளுத்துக்கட்டு என்ற அரசன் சோப் விளம்பர பாடலை தழுவிக் உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் நான்தான்டா இனிமேலு என்ற பாடல் ஐயப்பன் பாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருந்ததாக அனிருத்தும் சர்ச்சையில் சிக்கியதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.