இந்த சீரியலுக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என தமிழ் சின்னத்திரை சீரியல் ஒன்றை பலரும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு பெயருக்கு ஏற்றார் போல் மக்களின் மனங்களை கவர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகளுடன் எமோஷனல் பாண்டிங்குடன் ரசிகர்களை கட்டி போட்டு வருகிறது. ஆதியும் பாரதியும் எப்போது சேர்வார்கள்? இருவருக்கும் எப்போது கல்யாணம் நடக்கும். மூன்று இதயங்கள் இணைய போவது எப்போது என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
சீரியலில் ரத்னம் துரையை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதியிடம் சத்தியம் வாங்க ஆதி இனிமே உங்க வாழ்க்கையில் வர மாட்டேன் என்று தள்ளி போக என்னங்க கதையை இப்படி பண்ணிடீங்க என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
இப்படியான நிலையில் வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் ஆதிக்கு வாசுவுக்கு நடந்த விபத்து பற்றி தெரிய வர அந்த இடத்திற்கு வந்து பார்க்க ஹார்ட் பீட்டில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அடுத்து ஆதி துரையை சந்தித்து அண்ணன் பொண்டாட்டி அம்மா மாதிரி. பாரதிக்கும் தமிழுக்கும் ஏதாவது ஒண்ணுன்னா நான் திரும்பி வருவேன் டா என்று வாசுவின் குரலில் பேசுவது போல் உள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் ட்விஸ்ட், இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்கல. இதயத்திற்கு இதயம் கொடுத்த இயக்குனருக்கு நன்றி. இந்த சீரியலுக்கு ஆஸ்கர் அவார்ட்டே கொடுக்கலாம், சீரியல் அந்த மாதிரி இருக்கு என வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர். இதயம் சீரியல் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?