Fans Blast Shivani

உண்மைய சொல்லனும்னா பிக்பாஸ் வீட்டில் இதுவரை நான் செய்தது இதுதான் என வெட்கமே இல்லாமல் பேசியுள்ளார் சிவானி.

Fans Blast Shivani : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் முடிவடைந்து விட்ட நிலையில் நேற்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் இதுவரை இந்த பிக் பாஸ் வீட்டில் நீங்கள் செய்தது என்ன என ஒவ்வொருவராக பேசும்படி தெரிவித்திருந்தார்.

ஆனால் போட்டியாளர்கள் அனைவருமே என்ன பேசுவது என்று தெரியாமல் திக்கு முக்காடினர். அதிலும் குறிப்பாக சிவானி பேசும்போது இதுவரை நான் சொல்லும்படி எதையுமே செய்யவில்லை என கூறினார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் வெட்கமே இல்லாம எப்படி இப்படி சொல்றீங்க என கிண்டலடித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.