அமிர்தாவுடன் பாக்கியாவையும் சேர்த்து கடத்தி இருக்கலாம் என்று பாக்கியலட்சுமி சீரியலை கலாய்த்து எடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது எப்படா முடிப்பீங்க என்று புலம்பும் அளவிற்கு கதை இல்லாமல் கண்டமேனிக்கு உருட்டி வருகின்றனர்.
இப்படியான நிலையில் சமீபத்திய எபிசோட்டில் கணேஷ் தனது அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என பொய் சொல்லி நம்ப வைத்து அமிர்தாவை வீட்டுக்கு வர வைத்து பாக்கியாவுக்கு பல்பு கொடுத்து குழந்தையையும் அமிர்தாவையும் கடத்தினார்.
இது எல்லாம் பார்த்து ரசிகர்கள் மேலும் கடுப்பாகி கடத்தினவன் பாக்யாவையும் கூட சேர்த்து கடத்திட்டு போயிருக்கலாம், அப்பயாவது இந்த சீரியல் எனக்கு ஒரு எண்டு கார்டு போடுவாங்களான்னு பார்க்கலாம் என்ன விரத்தியுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
சிலரோ இந்த சீரியலுக்கு நீங்க எண்டு கார்டு போறீங்களா இல்ல விஜய் டிவிக்கு நாங்கள் எண்டு கார்டு போடட்டுமா என்று கூட கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நீங்க என்ன சொல்றீங்க??