ரோகினி திரையரங்கில் லியோ டைட்டில் டீசர் வெளியாகாததால் கொந்தளித்த ரசிகர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் இளைய தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து வேற லெவலில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் வெளியான இப்படத்தின் டைட்டில் பிரமோ இணையதளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது திரையரங்குகளிலும் படங்களின் இடைவெளி நேரத்தில் திரையிடப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஆனால் சென்னையில் ரோகிணி திரையரங்கில் படத்தின் இடைவெளி நேரத்தில் லியோ திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோ திரையிட படாததால் ரசிகர்கள் ஆவேசத்துடன் லியோ, லியோ என்று ஆவேசமாக கோஷம் போடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.