தோழியை இழந்த யாஷிகாவிற்கு ஏற்பட்டுள்ள இன்னொரு இறப்பிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Fans Advice to Yashika Anand : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மகாபலிபுரம் சென்று ஹோட்டலில் நண்பர்களுடன் உணவருந்திவிட்டு அதி வேகமாக காரில் பயணம் செய்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது தோழி வள்ளி செட்டி பவானி உயிரிழந்தார்.

குழந்தைகள் பாதுகாப்புக்கு, சிறப்பு பணிக்குழு : தமிழக அரசு உத்தரவு

யாஷிகா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாஷிகாவின் இடுப்பு எலும்பில் பல இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு அவரால் எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மோசன் கூட பெட்டிலேயே செல்வதாக கூறியிருந்தார். ‌‌

Re-Entry கொடுக்கும் Dhivyadharshini.., First Guest யாருனு தெரியுமா.? | Latest Tamil News | Kollywood

இதனால் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படங்கள் அவரது கையை விட்டு சென்றுள்ளன. யாஷிகாவை ஒப்பந்தம் செய்திருந்த தயாரிப்பாளர்கள் அவருக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் யாஷிகாவின் கைவசம் இருந்த அனைத்து படங்களும் கையை விட்டு சென்று விட்டன.

இதனால் ரசிகர்கள் பலரும் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். படங்களை காட்டிலும் முதலில் உடல் நலம் மிக முக்கியம். முதலில் எழுந்து நடக்க பிறகு பட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறி வருகின்றனர்.