பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்திர சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுபாளினியாக பணியாற்றிய மகாலட்சுமி சின்னத்திரை சீரியல்களில் நுழைந்து அனைவருக்கும் பரிச்சயமானார். இவர் அரசி, வாணி ராணி, தேவதையை கண்டேன் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வருகிறார்.

பிரபல சீரியல் நடிகையான இவர் தற்போது சினிமா துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் லிப்ரா ப்ரோடுக்ஷன் நிறுவனத்தின் ஓனரான ரவீந்திர சந்திரசேகரன் என்பவரை செப்டம்பர் 1ஆம் தேதி இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படத்தை தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.