வாரணம் ஆயிரம் படத்தின் டயலாக்கை நடிகை சிம்ரன் இடம் பேசி அசத்திய பிரபல இயக்குனரின் வீடியோ வைரலாகி வருகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற வித்தியாசமான காதல் கதைகளை இயக்கி அதிக ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் தான் கௌதம் மேனன். இவர் இயக்கிய “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தில் நடிகர் சூர்யா, சிம்ரனிடம் “ஹாய் மாலினி ஐஅம் கிருஷ்ணன் நான் இதை சொல்லியே ஆகணும். நீ அவ்வளவு அழகு. இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு.. இவ்ளோ அழகா பார்த்திருக்க மாட்டாங்க..and iam in love with you..”என்ற டயலாக்கை சூப்பராக பேசிய அசத்தியிருப்பார்.

பிரபல இயக்குனர் கூறிய டயலாக்கை கேட்டு உற்சாகமடைந்த சிம்ரன்… யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ.

இந்த டயலாக் தற்போது வரை அனைவருக்கும் ஃபேவரட் ஆகவே இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் கௌதம் மேனன், நடிகை சிம்ரனுக்கு விருது வழங்கியுள்ளார்.

பிரபல இயக்குனர் கூறிய டயலாக்கை கேட்டு உற்சாகமடைந்த சிம்ரன்… யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ.

அப்போது அவர் நடிகை சிம்ரனிடம் இந்த சூர்யாவின் டயலாக்கை பேசி மேடைக்கு அழைத்துள்ளார். அதனால் சிம்ரன் மற்றும் அந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே உற்சாகமடைந்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.