தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறப்பப் போவதாக கூறி கொண்டு திரையுலக பிரபலங்கள் அரசியலில் இறங்குவது ட்ரெண்டாகி வருகிறது.

ரஜினி, கமல் ஆகியோர் முழு நேர அரசியலில் இறங்கியதை அடுத்து சர்கார் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜயும் நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன். ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முயற்சி செய்வேன் என கூறினார்.

இது குறித்து தற்போது பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் என்பவர் ஊழலை ஒழிப்பதாக கூறி கொண்டு அரசியலுக்கு வரும் சினிமாகாரர்களை நம்பாதீர்கள். என்னையும் சேர்த்து தான் கூறுகிறேன்.

முதலில் இவர்களை சினிமாவில் ஊழலை ஒழிக்க சொல்லுங்க. படத்தை எடுத்து விட்டு அதற்கு லஞ்சம் கொடுக்காமல் வரி சலுகையை வாங்க முடியாது என கூறியுள்ளார்.

இவர்களால் ஊழலை எப்படி ஒழிக்க முடியும்? என கூறியுள்ளார். இயக்குனர் மோகன் இவ்வாறு பேசியது விஜயை சீண்டுவது போல இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here