நடிகர் சிவகார்த்திகேயனை பிரபல இயக்குனரான மிஷ்கின் அவர்கள் மனமார பாராட்டி இருக்கிறார். இது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் சமீபத்தில் வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து அளித்திருக்கும் பேட்டி வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மெயின் வில்லன் நான்தான். இப்படத்தில் MLA கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நடிகர் சிவகார்த்திகேயன் நிச்சயம் பான் இந்தியா நடிகராக உயர்ந்து வருவார், அதுமட்டுமின்றி அவர் ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர். எப்போதும் எளிமையாக இருக்கிறார் என்று பாராட்டி கூறியிருக்கிறார்.