சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான தம்பதிகளாக   திகழ்ந்து கொண்டிருக்கும் செந்தில் மற்றும் ராஜலட்சுமி யின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் தம்பதிகளாக பங்கேற்று பிரபலமானவர்கள் தான் “செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி” தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழில்முறை நாட்டுப்புற பாடக கலைஞர்கள். தம்பதியினர் இருவரும் சேர்ந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர். அதன்பின் விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர்கள் தங்களது நாட்டுப்புற கிராமிய பாடல்களை அந்நிகழ்ச்சியில் பாடி மக்களை அசத்தியுள்ளனர். மேலும் அந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக செந்தில் கணேஷ் அவர் 50 லட்ச ரூபாயை பரிசாக பெற்று இருந்தார். 

இணையத்தில்வெளியான பிரபல  தம்பதியரின் திருமண புகைப்படங்கள் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

அதன்பின் அந்நிகழ்ச்சியில் இருவருமே பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்த நிலையில்  இந்தப் பாடலை நடிகரும்,நடன இயக்குனருமான பிரபுதேவா அவர்கள் இந்த சின்ன மச்சான் பாடலை தனது “சார்லி சாப்ளின் 2 ” படத்தில் அவர்களை பாட வைத்து இவர் நடனமாடி அசதி இருப்பார். இதில் கிடைத்த வெற்றியின் மூலம் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் தொடர்ந்து பல படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருகின்றனர். சமீபத்தில் ராஜலட்சுமி பாடிய ‘புஷ்பா’ படத்தில் உள்ள ‘ஏ சாமி’ என்ற பாடல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். 

இணையத்தில்வெளியான பிரபல  தம்பதியரின் திருமண புகைப்படங்கள் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

இப்படி பிரபலமான தம்பதிகளாக  வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு இருவருமே மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருக்கின்றனர் என்பதால் இவர்கள் தானா என்ற ஆச்சரியத்தோடு ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.