ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே போல் தொலைக்காட்சி நிறுவனமும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய சீதா ராமன், சண்டக்கோழி உள்ளிட்ட சீரியல்கள் நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது. அதே போல் வெகுவிரைவில் இதயம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது, இதில் நாயகியாக ஜனனி அசோக் குமார் நடிக்க மலையாள சீரியல் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடித்து வருகிறார். வெகு விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

அதே போல் ஆபீஸ் டைம் என்ற பெயரில் இளம் ரசிகர்களை கவரும் வகையில் இன்னொரு சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியானது, இப்படியான நிலையில் மேலும் ஒரு புது சீரியல் உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இதயத்தை திருடாதே சீரியல் பிரபலம் நவீன் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன, மேலும் அவருக்கு ஜோடியாக ஸ்டார் மா சேனலில் சில சீரியல்களில் நடித்து பிரபலமான பாவனா லஸ்யா என்பவர் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு இது தான் முதல் தமிழ் சீரியல் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த சீரியல் சமையல் சார்ந்த கதைக்களத்தை கொண்ட சீரியலாக உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது, விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த தகவலால் நவீன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.