தளபதி விஜய் வீட்டு பக்கத்தில் புதிய வீடு வாங்கி உள்ளார் முன்னணி நடிகர் ஒருவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

தளபதி விஜய் நீலாங்கரை பகுதி உள்ள ஒரு பிரம்மாண்ட வீட்டில் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் ஆரியபுரத்தில் ஒரு பிளாட் வாங்கியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த பிளாட்டுக்கு பக்கத்தில் ஒரு வீடு வாங்கியுள்ளார் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான்.

ஒன்பதாயிரம் ஸ்கொயர் ஃபீட்டில் அமைந்துள்ள இந்த பிளாட் விலை 30 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை தலை சுற்ற வைத்துள்ளது.