கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது முடிவை நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் நிகழ்ச்சி முடிந்து விடும்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, யாஷிகா, விஜயலட்சுமி என 5 பெண்களும் ஆண்களில் பாலாஜி மட்டுமே உள்ளே உள்ளார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள்ள 5 பெண் ஒத்த ஆம்பள இது தான் நல்ல சான்ஸ் என பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறீர்களா? இல்லை கலாய்க்கவா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றும் சிலர் ஒத்த ஆம்பளையா இருந்தாலும் அத்தனை பொண்ணுகளுக்கு இடையில் ஒழுங்காக இருக்கிறார். உங்க புத்தி ஏன் இப்படி யோசிக்கிறது எனவும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.