கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளது. தற்போது இறுதி போட்டியில் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களாக ஐஸ்வர்யா எலிமினேஷலில் இருந்து தப்பித்து வந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் எப்படியோ பைனல் வரை சென்று விட்டார்.

இந்நிலையில் தற்போது நடிகையும் முதல் சீசன் போட்டியாளருமான ஆர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதாவது அவர் டீவீட்டில் நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக் கூடாது. இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம்! என பதிவு செய்துள்ளார்.

இதனால் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் ஆர்த்தியை திட்டி தீர்த்து வருகின்றனர். உங்களின் ஒட்டு யாருக்கு? பிக் பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் ரசிகர்களே?