பிரபல நடிகரான மைக் மோகன் விஜயுடன் நடிக்க வந்த ஆஃபரை மறுத்திருக்கிறார். இது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை வட்டாரத்தில் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க 80ஸ் காலகட்டத்தில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருந்த மைக் மோகன் அவர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

ஆனால் மைக் மோகன் நான் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் எனக்கூறி இப்படத்தை மறுத்திருக்கிறார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மைக் மோகன் ஹரா என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.