தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, பழ கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த சர்கார் படத்துடன் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை வெளியிட திட்டம் தீட்டி வரும் நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திமிரு பிடிச்சவன் படம் சர்காருடன் மோத இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.