அப்பாவை வைத்து முதல் படத்தை இயக்க மாட்டேன் என சஞ்சய் கூறியதாக தெரிவித்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் சஞ்சய் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்க உள்ளார்.

சினிமா சார்ந்த பட்டையை படிப்பை முடித்த சஞ்சய் நடிகராக திரையுலகில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இயக்குனர் பாதையை தேர்வு செய்துள்ளார். இந்த நிலையில் சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில் சஞ்சய் விஜயை வைத்து முதல் படத்தை இயக்க மாட்டேன் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.

கண்டிப்பாக என்னுடைய முதல் படம் விஜய் சேதுபதியை வைத்து தான் என தெரிவித்ததாகவும் அதன் பிறகு தான் அப்பாவை வைத்து படம் இயக்குவேன் என தெரிவித்ததாக கூறியுள்ளார். ஏற்கனவே விஜய் அப்பாவால் தான் திரையுலகிற்கு வந்தார் என்ற பேச்சு இருக்கிறது. அதே பேச்சு தனக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே சஞ்சய் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

இயக்குனராக வென்ற பிறகு தான் அப்பாவை இயக்குவேன் என சஞ்சய் நம்பிக்கையுடன் கூறியது தனக்கு சந்தோஷத்தை தந்ததாக எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.