
கர்ப்பமான பின்னரே கல்யாணம் செய்து கொள்வேன் என ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் தனுஷ் பட நடிகை.
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்திருந்தார் டாப்ஸி.

எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்த டாப்ஸி அதன் பிறகு தெலுங்கு மொழியில் கவனம் செலுத்த தொடங்கி தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக இடம் பிடித்து தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் உரையாடிய போது எப்போது கல்யாணம் என கேட்க நான் இன்னும் கர்ப்பமாகவில்லை அதனால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அதாவது கர்ப்பம் ஆன பின்னரே கல்யாணம் என கூறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆனால் இவர் பாலிவுட் சினிமாவில் கல்யாணம் செய்து கொள்ளாமல் நடிகைகள் கர்ப்பமாவது குறித்து விமர்சிக்கவே இவ்வாறு பதிலளித்துள்ளார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
