
ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்கு குணசேகரன் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Ethir Neechal Episode Update 23.05.23 : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஈஸ்வரி எங்களையும் மனுஷங்களா மதிங்க என்று பேச போதுமா நிறுத்திக்குங்க என குணசேகரன் அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதன் பிறகு கோவிலில் கல்யாண ஏற்பாடு நடந்து கதிர் ஆதிரையை கரிகாலன் பக்கத்தில் உட்கார சொல்ல என்னால் முடியாது என ஆதிரை அடம்பிடிக்கிறார். கதிர் அவளை வலுக்கட்டாயமாக வரவைக்கும் முயற்சி செய்ய ஜனனி ஸ்டாப் இட் என சத்தம் போட்டு தடுத்து நிறுத்துகிறார்.
ஆதிரையின் கல்யாண பேச்சு தொடங்கியதில் இருந்து சீரியலின் விறுவிறுப்பு குறைய தொடங்கிய நிலையில் இந்த ப்ரோமோவும் பெரியதாக கவரும்படி இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
