நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் எதிர்நீச்சல் ஈஸ்வரி.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் இணைந்து வரலாறு உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் கனிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கேரளாவை பூர்விகமாகக் கொண்ட கனிகா சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வபோது சில போட்டோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெயிலுக்கு குளிர்ச்சியாக நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஈஸ்வரி மேடம் இதையெல்லாம் குணசேகரன் பார்த்தால் என்ன ஆகிறது என கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.