
விசாலாட்சியை கோர்த்து விட்டுள்ளான் கரிகாலன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் நந்தினி முதல் முறையாக கேட்டரிங் பிசினஸ் தொடங்க குணசேகரனிடம் கையும் களவுமாக சிக்கிய நிலையில் கோவிலுக்கு என்று பொய் சொல்லி தப்பிக்க விசாலாட்சியும் அவர்களை மாட்டி விடாமல் நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் குணசேகரன் ஒருத்தி கோவிலுக்குன்னு சொல்லிட்டு எடுத்துட்டு போறா, இன்னொருத்தி வீட்டுக்கு வந்தவங்களை மேல கூட்டிட்டு ஓடுறா எனக்கு என்னமோ பெரிய வெடியா வைக்க போறாங்கன்னு தெரியுது என்று சொல்ல கரிகாலன் உங்களுக்கு எதிரா ஒரு பெரிய சதி வேலையே நடக்குது என்று சொல்கிறார்.
உடனே விசாலாட்சி வாய மூடுடா இருக்கிற குழப்பம் போதாதுனு நீ வேற குழப்பி விடுறியா என்று சொல்ல எனக்கென்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு என்று சொன்னதும் குணசேகரனும் விசாலாட்சியை சந்தேக பார்வையோடு பார்க்கிறார்.
