கதிருக்கு போலீஸ் ஆப்பு வைக்க ஜான்சி ராணிக்கு ஷாக் கொடுத்துள்ளார் சக்தி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஆதிரை தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறுபக்கம் கரிகாலனும் ஜான்சிராணியும் ஆதிரையை தேடி ஹாஸ்பிடல் அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் வீட்டிற்கு வரும் போலீஸ் கதிரை ஸ்டேஷன் வரைக்கும் அழைத்துச் செல்வதாக சொல்லி விட்டு ஆதாரம் எதையோ காட்டுகின்றனர்.

மறுபக்கம் ஜான்சிராணியும் கரிகாலனும் ஆதிரை இருக்கும் மருத்துவமனையை தேடி பிடித்து வர சக்தி அண்ணன் சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்காது என ஜான்சி ராணிக்கு ஷாக் கொடுக்கிறார்.

இதனால் இன்றைய எபிசோடும் வழக்கம் போல அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.