எதிர்நீச்சல் சீரியலின் டெலிகாஸ்ட் நேரம் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.
ஜனனி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது பட்டம்மா பாட்டி உதவியுடன் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து தனது அடுத்த இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார். மேலும் பட்டம்மா பாட்டி குணசேகரன் யார் அவன் செய்த வேலைகள் என்ன என்பதை குறித்து மொத்தமாக முகத்திரையை கிழிக்கிறார்.
அதேபோல் குணசேகரனின் அம்மா மருமகள்களை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தும் நிலையில் நீ இந்த வீட்டுக்கு வரும்போது என்ன கொண்டு வந்த என கேட்டு தலைகுனிய வைக்கிறார். இப்படி ஆன நிலையில் இந்த சீரியல் டெலிகாஸ்ட் நேரத்தை மாற்றுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் சன் டிவி டெலிகாஸ்ட் நேரத்தை மாற்ற முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாவதால் பலரும் பார்க்க முடியவில்லை எனக் கூறிவந்த நிலையில் இந்த சீரியலை 8.30 மணிக்கு மாற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்