
ரேட்டிங்கில் மாஸ் காட்டி வரும் எதிர் நீச்சல் சீரியல் ஒளிபரப்பில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரையின் கட்டாய கல்யாண எபிசோடுகளில் இருந்து சீரியல் தொடர்ந்து ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.
நக்கல், நையாண்டி, வில்லத்தனம், எமோஷன் என அனைத்து கலந்த ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த வாரம் முதல் எதிர் நீச்சல் வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.