மாலத்தீவு பீச்சில் ஜாலி பண்ணும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மதுமிதா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மதுமிதா. கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தமிழில் அடி எடுத்து வைத்தார்.
தமிழிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் ஜாலி பண்ணும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.