ஆதிரையை குணசேகரனும் தம்பிகளும் சுற்றி வளைத்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜனனி டீம் இருக்கும் இடம் குணசேகரனுக்கு தெரிய வந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

குணசேகரன், கரிகாலன் என எல்லோரும் காரில் வேகமாக வந்து கொண்டிருக்க ஜனனி கௌதமுக்கு போன் செய்து கேட்க அவர் அருண் மலையில் இருந்து இறங்கி விட்டதாக சொல்ல ஷக்தி முதல்ல இங்க இருந்து கிளம்பலாம் வாங்க என சொல்கிறார்.

ஆதிரை அண்ணனுங்க எல்லாம் இங்க வந்துட்டா அவ்வளவு தான் என பயத்துடன் எல்லோரும் கிளம்ப குணசேகரன் டீம் கோவிலில் வந்து இறங்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இதனால் ஆதிரை கல்யாணத்தில் என்ன நடக்கும்? யாருடன் நடக்கும்? என்ற ட்விஸ்ட்டுடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.