முகத்துக்கு நேராக சவால் விட்டுக் கொள்கின்றனர் கதிர் மற்றும் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தாரா நந்தினி போட்டிருந்த நகைகள் அனைத்தையும் குணசேகரனிடம் கொடுக்கிறார். இதனால் குணசேகரன் கதிரிடம் என்னை நீ அசிங்கப்படுத்திய என்று கேட்க நந்தினி உங்க குணம் என்னன்னு அவளுக்கு நல்லா மனசுல பதிஞ்சு போய் இருக்கு, இதுக்கெல்லாம் காரணம் நாங்க இல்ல என பதிலடி கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஈஸ்வரி நீதிபதியிடம் என் பொண்ணை கண்டுபிடிப்பதற்கு அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல தயவுசெய்து என் பொண்ண கண்டு பிடிங்க என கை கூப்பி கேட்கிறார்.
அதைத்தொடர்ந்து கதிர் இத பாரு நான் உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கறதுனால எனக்கு உலகம் தெரியாதுன்னு நினைக்காத என சவால் விடுகிறார். பதிலுக்கு குணசேகரன் இந்த குணசேகரன் பகைச்சிக்கிட்டு யாரும் முளைக்க முடியாது என கூறுகிறார்.