
குணசேகரனை குடும்ப பெண்கள் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் நிலையில் ஆதிரை அவரை வெட்ட போயுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நந்தினி, ரேணுகா, ஜனனி, ஷக்தி என எல்லோரும் ரவுண்ட் கட்டி குணசேகரனை திணற விட்டு வரும் நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஜனனி யாராவது மூணாவது மனுஷன் கம்ப்ளைன்ட் கொடுத்தா கூட இந்த கல்யாணம் செல்லாது. ஜனனி சொல்ல நந்தினி அப்படினா அதை நாமலே செஞ்சி விடுவோமே என சொல்கிறார்.

ஆனால் ஜனனி ஆதிரை என்ன முடிவுல இருக்கானு தெரியல என்று சொல்ல எனக்கு முதலில் அருணை பார்க்கணும் என்று பதில் கொடுக்கிறார். அடுத்ததாக குணசேகரன் நந்தினியிடம் ஆதிரை, கரிகாலனுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யலையா என்று கேட்க அதெல்லாம் பண்ண முடியாது என பதிலடி கொடுக்கிறார்.

கரிகாலன் இவங்க கல்யாணம் ஆனதுல இருந்து இதை தான் சொல்லிட்டு இருக்காங்க என புலம்ப ஆதிரை எனக்கு இவன் வேண்டாம் என அரிவாள்மனையை எடுத்து சண்டைக்கு நிற்கிறார். இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
