குணசேகரனுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அவரது மகள் தர்ஷினி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் பொம்பளையாளுங்களை நடத்த வேண்டிய விதத்தில் நடத்தணும் என சொல்ல கரிகாலன் ஆதிரை மேல் நான் வச்சிருக்க காதல் என்னை தடுக்குது என சொல்ல குணசேகரன் பெரிய காதல், ரெண்டு பேரும் நிலாவுல இருந்தா குதிச்சீங்க என நக்கல் அடிக்கிறார்.

அதனை தொடர்ந்து கரிகாலனை அடிக்க போன் தர்ஷினியை குணசேகரன் மன்னிப்பு கேட்க சொல்ல அவர் முடியாது என சொல்லிட்டு போக என்னப்பா எல்லாம் இப்படி பண்றாளுங்க, இதுக்கு எதுக்கு நம்ம மீசையை வெச்சிட்டு திரியணும் என புலம்புகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.