ஆதிரை மற்றும் அருணுக்கு கல்யாணம் செய்து வைப்போம் என ஜனனி வாக்கு கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நாளைக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தொடர்ந்து அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் அபாய கட்டத்தை தாண்டி கண் திறக்கும் ஆதிரையிடம் ஜனனி உனக்கும் அருணுக்கும் நாங்க கல்யாணம் பண்ணி வைப்போம் என வாக்கு கொடுக்கிறார்.

மறுபக்கம் குணசேகரன் மற்றும் கதிர் ஸ்டேஷனுக்கு சென்றிருக்க அங்கு அருண் அண்ணா கம்ப்ளைன்ட் கொடுத்தது பற்றி பேச போலீஸ் எதிரே கதிர் அருண் அண்ணனை அடிக்க பாய போலீஸ் குணசேகரனை எதிர்த்து அதிர்ச்சி கொடுக்கின்றனர்.