கதிர் வைக்கும் செக்மேட்டில் குணசேகரனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் வேகமாக வீட்டுக்கு வரும் ஷக்தி மரியாதையா என் பொண்டாட்டியையும் அவ குடும்பத்தையும் வெளியே விட்டுங்க என்று சொல்ல குணசேகரன் வாயை மூடு டா தம்பினு கூட பார்க்க மாட்டான் என சொல்கிறார்.
உமையாளுக்கு போன் பண்ணும் தம்பி மகன்கள் அந்த ஜனனியும் அவ குடும்பமும் வெளிய வரவே முடியாது என சொல்கின்றனர்.
மறுபக்கம் கதிர் அவங்களே ஜனனியையும் அவ குடும்பத்தையும் கொண்டு வந்து விடுவாங்க, அப்படி ஒரு வேலை பார்த்து இருக்கேன் என உண்மையை உடைக்கிறார்.