EPS Speech
EPS Speech

EPS Speech – சென்னை: எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை, அப்படியே ஆதாரம் இருந்தால் சசிகலா குடும்பம் எங்களை சும்மா விட்டிருக்குமா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று மாலை பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே 4 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பூந்தமல்லி நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்ட பணிகளின் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பிறகு புதிய கட்டடங்களை திறந்து வைத்து, அவர் பேசியதாவது, 1989 ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றேன். அப்போதிருந்தே நான் ஜெயலலிதா விசுவாசி.

2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு, கோடநாடு இடம் தனியாரிடம்தான் இருந்தது.

மேலும், கோடநாடு கொள்ளை என்பது கூலிப்படையினரால் செய்யப்பட்ட சம்பவம். கைது செய்யப்பட்ட சயானை திமுகவினர் தான் ஜாமீனில் இருந்து வெளியே எடுத்து உதவி செய்திருக்கிறார்கள்.

மேலும் மனோஜ் மீது கேரளாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன..

இந்நிலையில், ‘தேவையே இல்லாமல் இதில் என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது’ இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கோடநாடு கொலைச் சம்பவத்தில் எங்களுக்கு எதிரான ஆதாரம் கிடைத்திருந்தால் சசிகலா குடும்பம் எங்களை சும்மா விட்டிருக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்..

மேலும் தற்போது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த வழக்கு முடிந்து 2 ஆண்டு ஆகிவிட்ட பிறகும், திடீரென எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது என்று கூறிய அவர், இதை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்… என்று கூறினார்.