மதுரையில் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தால் தூங்கா நகரம் அதிர்ந்து போய் உள்ளது.

EPS Campaign in Madurai : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தை காண ஆயிரக்கனக்கான மக்கள் மதுரையின் பல்வேறு பகுதியில் திரண்டனர். இதனால் மதுரை மாநகரமே மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அ.தி.மு.கவின் கோட்டை என்று கருத்தப்படும் தென் மாவட்டங்களின் தலைநகர் மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

முதலமைச்சரின் பிரச்சாரத்தை காண காலை முதலே மக்கள் அலைகடலென திரண்டனர். இதனால், மதுரை மாநகரமே மக்கள் வெள்ளத்தில் குலுங்கியது. குறிப்பாக, அமமுக ஆதரவு அதிகமாக இருக்கிறது என்று கூறப்பட்டு வந்த மேலூர் பிரச்சாரத்தில் பல்லாயிரக்கனக்கான மக்கள் திரண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.கவின் கோட்டை என்று கருத்தப்படும் இந்த இடங்களில் முதலமைச்சரின் பிரச்சாரத்திற்கு திரண்ட கூட்டத்தை பார்க்கும்போது, அ.ம.மு.கவின் வருகை அ.தி.மு.க வாக்கு வங்கியை கனிசமாக பாதிக்கும் என்று கூறியவர்களின் கருத்தை தகர்க்கும் வகையில் அமைந்திருந்தது முதல்வருக்கு கூடிய இந்த கூட்டம்.

சமூக ரீதியான வாக்குகள் சில அ.ம.மு.கவிற்கு கிடைக்குமே தவிர அ.தி.மு.கவின் வாக்குகள் மாறும் என்ற கூற்று தவிடு பொடியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் மதுரை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்து அ.தி.மு.க வசமே உள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.