கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட இன்ஜின் கோளாறு..அப்செட்டில் அஜித் ரசிகர்கள்.!!
கார் பந்தயத்தின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் அப்சட் ஆகி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது நடிகர் அஜித்குமார் ரேசிங் அணியின் கார் இன்ஜின் கோளாறு காரணமாக தீப்பிடித்து உள்ளது அந்த காரை ஓட்டிய ரேசர் அயர்டன் என்பவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளார்.
இதனால் அந்த ரேசிங் அணிக்கு மட்டுமல்லாமல் அஜித்குமாரை ஆதரிக்கும் இங்குள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் ஒரு பெரும் ஏமாற்றமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
