அடுத்தடுத்து இரண்டு சன் டிவி சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளன.

End Card to Kannana Kanne Serial : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கென மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனலாக இருந்து வருகிறது சன் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இப்படியான நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு பிரபல சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆமாம் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியல் மற்றும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனால் இந்த இரண்டு சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.