ரேட்டிங் தொடர்ந்து அடிவாங்கி வருவதால் அடுத்தடுத்து மூன்று சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சேனல் சன் டிவி. இந்தச் சேனலில் காலை 11 மணி முதல் இரவு 10:30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.
இருப்பினும் இது சேனல் இன்னும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாக தொடங்கிய பல சீரியல் தற்போது டிஆர்பி-யில் அடிவாங்கி வருகின்றன.
இதன் காரணமாக தொடர்ந்து ரேட்டிங் குறைந்து வரும் மூன்று சீரியல்கள் அடுத்தடுத்த முடிவுக்கு கொண்டு வர சன் டிவி முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆமாம் மிஸ்டர் மனைவி, அன்பே வா ஆகிய சீரியல்களும் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலையும் எண்டு கார்டு போட்டு முடித்து விட தொலைக்காட்சி தரப்பில் முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.