Election 2019
Election 2019

Election 2019 :

இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளன.

வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை தமிழகம் முழுவதும் அரசு பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க நமது ஃபேவரிட் பிரபலங்கள் எந்தெந்த இடங்களில் வாக்குபதிவு செய்ய உள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் பிரபலங்கள் எந்தெந்த இடங்களில் வரும் 18-ம் தேதி வாக்குபதிவு செய்ய உள்ளார்கள் என்பது அடங்கிய முழு விவரம் இங்கே:

காலை 7 மணிக்கு  நடிகர் அஜித்  மற்றும் குடும்பத்தினர் வாக்கு செலுத்துகிறார். இடம் :  சென்னை தொடக்கப்பள்ளி, பீச் ரோடு, திருவான்மியூர் .

காலை 7.30 மணிக்கு கௌதம் கார்த்திக் வாக்கு செலுத்துகிறார்
இடம் : ஸ்டெல்லா மேரிஸ்

காலை 7.30 மணிக்கு  இசை அமைப்பாளர் தேவா மற்றும் குடும்பத்தினர்  வாக்கு செலுத்துகிறார். இடம் : சர்மா பார்க் , அபிபுல்லா சாலை.

7.30AM மணிக்கு நடிகர் சூர்யா , நடிகர் கார்த்தி , நடிகர் சிவகுமார்  மற்றும் குடும்பத்தினர் –  இடம் : இந்தி பிரச்சார சபா , தி.நகர்

7.30AM மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு செலுத்துகிறார்.
இடம் – குட் ஷெப்பர்ட் பள்ளி , (Good Shepherd School ) வளசரவாக்கம்

காலை 7.30 மணிக்கு நடிகர் விவேக்  வாக்கு செலுத்துகிறார்.
இடம் : கரோடியா பெண்கள் பள்ளி , சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில்

காலை 9 மணிக்கு நடிகர் கருணாஸ் மற்றும்  அவரது மனைவி வாக்கு செலுத்துகிறார்கள். இடம் : கரியப்பா  பள்ளி தசரதபுரம்

காலை 10 மணி நடிகர் சத்தியராஜ் வாக்கு செலுத்துகிறார்.
இடம் :  காதர் நவாஸ் கான் ரோடு

காலை 10 மணிக்கு நடிகர் RJ பாலாஜி வாக்கு செலுத்துகிறார் .
இடம் : நாடார் பள்ளி பெருமாள் கோவில் முதல் தெரு , கோட்டூர்புரம்

காலை 10.30 மணிக்கு இயக்குனர் மோகன் ராஜா வாக்கு செலுத்துகிறார்
இடம் : சுப்ராயன் நகர் , கோடம்பாக்கம் .

காலை 11 மணிக்கு  இசை அமைப்பாளர் டி. இமான் வாக்கு செலுத்துகிறார்.
இடம் : பால்லோக் பள்ளி சலிக்ராமம்.

மதியம் 2 மணிக்கு நடிகர் வடிவேல் வாக்கு செலுத்துகிறார்.
இடம் : காவேரி பள்ளி சாலிகராமம்.

நடிகர் விஜய்  –  சென்னை மேல்நிலைப்பள்ளி, பப்பாஞ்சாவடி காமராஜர் அவென்யூ 2 தெரு, அடையாறு

விஜய்காந்த் மற்றும் குடும்பத்தினர் – காவேரி பள்ளி, சாலி கிராமம்

டி.ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் –  இந்தி பிரச்சார சபா, தி.நகர்

நடிகர் ரஜினிகாந்த் – ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி

 கார்த்திக் – ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி

சரத்குமார் , ராதிகா சரத்குமார் வாக்கு செலுத்துகின்றனர்
இடம் : நெல்லை நாடார் பள்ளி , கொட்டிவகம்.

நடிகர் கருணாகரன்
இடம் : பத்திரிகையாளர்  காலனி, திருவான்மியூர் .

இயக்குனர் முருகதாஸ்
இடம் : விருகம்பாக்கம்

கவிஞர் வைரமுத்து வாக்களிக்கும் இடம்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ,ட்ரஸ்ட் புரம் 2 ஆம் பிரதான சாலை,கோடம்பாக்கம் காலை 8.30 மணி.

மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.