
Edappadi Palaniswami Proud – சென்னை: சென்னை பெருங்குடி அருகே, எம்ஜிஆர் சாலையில் புதிய மருத்துவமனை திறப்பு விழா ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டார்.
அதில் பேசிய முதல்வர், “இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் திகழ்ந்து வருகின்றது.
உயிரை காப்பாற்றும் மருத்துவர்களை, மக்கள் தெய்வமாக பார்க்கின்றனர். மேலும் தமிழக அரசின் தொடர் முயற்சியால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
தற்போது தமிழக மருத்துவத்துறை சிறந்த சேவை செய்து வருகிறது, மற்றும் மகப்பேறுக்கான பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்” .
இந்நிலையில், “முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் தான் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு மாதிரி திட்டம்” என்று விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஒபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் பல பயன்கள் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் உயர்தரமான மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தமிழகத்தில் உள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் ‘ஏழை எளிய மக்களுக்கு முதல்வரின் இந்த விரிவான காப்பீடு திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது’ என்று தெரிவித்தார்.