Edappadi Palanisamy Relief Material
Edappadi Palanisamy Relief Material

Edappadi Palanisamy Relief Material – கஜா புயலால் தமிழகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதிலும், மிக பெரிய இழப்பை டெல்டா மாவட்டங்களில் வாழும் மக்கள் அடைந்துள்ளனர்.

மேலும், மத்திய குழு டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட புயல் பாதித்த மாவட்டங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரை புதுக்கோட்டை, தஞ்சாவூர்,நாகை,காரைக்கால் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கஜா புயலின் இந்த கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

மேலும் தென்னை மரங்கள், பயிர்கள் நாசமாகியுள்ளதால் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை ரயில் மூலமாக நாகைக்கு வந்து சேர்ந்தார்.

மேலும் நாகை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தபின் அவர், “நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயலால் பாதித்த மக்களுக்கு முதற்கட்டமாக நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்கினார்”.