
Edappadi K Palaniswami – நாகை: தமிழகத்தில் கஜா புயல் பாதித்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை ரயில் மூலமாக நாகைக்கு சென்றார்.
அங்கு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, புயலால் பாதித்த மக்களுக்கு முதற்கட்டமாக நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்கினார்.
இந்நிலையில், நாகப்பட்டினம் நிவாரண முகாமில், நிவாரண பொருட்களை வழங்கி அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதன் பிறகு நாகை மாவட்டத்தின் கோயில்பத்து என்ற ஊரில் சேதமடைந்துள்ள அரசின் உணவு தானியக் கிடங்கை அவர் பார்வையிட்டார்.
மிகப் பெரிய உணவு தானிய கிடங்கான இது கஜா புயல் காரணமாக கடும் சேதத்தை சந்தித்திருந்தது. பிறகு, மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் மாதிரிகளையும் சோதித்து பார்த்து தரமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்தார்.
அப்போது வேட்டைக்காரனிருப்பு என்ற பகுதியிலுள்ள நிவாரண முகாமுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “நிவாரண முகாமில் மக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த உணவை தானும் சாப்பிட்டு தரத்தை சரிபார்த்தார்”.
மேலும், நிவாரண முகாமில் மக்களோடு அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவையே தானும் சாப்பிட்டார்.
அப்போது உடன் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் நிவாரண முகாம்களில் உணவை சாப்பிட்டனர்.