திடீர் நிலநடுக்கத்தால் லியோ படத்தின் சூட்டிங் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜம்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், தாமஸ் மாதீவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடந்து வரும் நிலையில் திடீரென காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் ஜம்பு காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.