கமலின் தக் லைப் படத்திலிருந்து துல்கர் சல்மான் வெளியேறி உள்ளார்.
Dulquar Salman Quit From Thug Life Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையும் டீஸர் ஷூட்டிங்கும் நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த துர்கா சல்மான் படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே நடிகர் சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பதால் இந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.