NGK Updates

NGK Updates : சூர்யா நடித்து வரும் NGK படத்தின் மாஸான இரண்டு அப்டேட்கள் கிடைத்துள்ளன. இவை இரண்டும் நிச்சயம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK, கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் பலரும் NGK படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டர் பக்கத்தில் சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால் இந்த படத்தின் ஒரு பாடலை ரசிகர்களின் பேவரைட் சிங்கர் ஸ்ரீ ராம் அவர்கள் பாடியுள்ளாராம். இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் NGK படத்தில் நடித்துள்ள ஸ்டண்ட் மேன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிரபல மார்க்கெட் ஒன்றில் செம மாஸான சண்டை காட்சி ஒன்று உள்ளது.

இதில் சூர்யா சார் 50 பேரை அடித்து தும்சம் செய்வார். இந்த காட்சி மிகவும் அருமையாக வந்துள்ளது என கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில் NGK படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு டபுள், ட்ரிபிள் என பல கொண்டாட்டங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.