யாரும் சுயமரியாதையை மட்டும் இழக்கவேண்டாம்: ரவிமோகன் பேச்சு..

Web Ads

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘பராசக்தி’ படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற10-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2-வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Web Ad 2

இது தோடர்பாக ரவிமோகன் தெரிவிக்கையில், ‘பராசக்தி திரைப்படத்தில் நான் நடித்ததற்கு 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலில் இது சுயமரியாதையைப் பேசும் திரைப்படம். என் சொந்த வாழ்க்கையிலிருந்து சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என கற்றுக்கொண்டேன். நீங்கள் யாரும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழக்க வேண்டாம்.

இன்னொரு காரணம் இயக்குநர் சுதா கொங்கரா. இப்படம் பலரின் கடுமையான உழைப்பால் தங்கம் போல உருவாகியிருக்கிறது’ என தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ரவிமோகன் முதன்முதலாக வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

dont lose your self respect actor ravi mohan
dont lose your self respect actor ravi mohan