சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் பாடல் குறித்து படக்குழு வெளியிட்டு இருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கி வரும் மாவீரன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டான் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜலபுல ஜங்கு பாடல் குறித்த புதிய தகவலை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

அதன்படி அனிருத் இசையமைத்து பாடியிருந்த இப்பாடல் இணையதளங்களில் ரீல்ஸ், ஷார்ட் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு ட்ரெண்டிங்கான நிலையில் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதற்கு ரசிகர்களும் உற்சாகத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.