பிரபல இசையமைப்பாளராக திகழும் யுவன் சங்கர் ராஜாவின் பாடலின் பிரிஸ்கிரிப்ஷன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபலம் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் ஆவார். யுவன் முதல் முதலில் 1997 ஆம் ஆண்டில் வெளியான அரவிந்தன் என்னும் படம் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, நந்தா, ராம், பருத்திவீரன், பில்லா, மங்காத்தா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து வந்தார்.

இவர் தற்போது வரை 150 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் பேவரைட் இசையமைப்பாளராக தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது வரை 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள யுவன் சங்கர் ராஜாவுக்கு அண்மையில்கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாக்டர் யுவனின் பிரிஸ்கிரிப்ஷன் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மருத்துவர்கள் மாத்திரைகளை எழுதுவது போல யுவனின் பாடல்களின் பெயர்களை குறிப்பிட்டு எந்தெந்த வேலைகளில் எவ்வளவு கேட்க வேண்டும் என்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.