இப்படி மட்டும் செய்து இருந்தால் மாரிமுத்துவை காப்பாற்றி இருக்கலாம் என சிகிச்சை அளித்த மருத்துவர் கூறி இருக்கிறார்.

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் பிரபல நடிகராக வலம் வந்தவர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வலம் வந்த இவர் நேற்று காலை 8.30 மணி அளவில் டப்பிங் பேசும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தன்னுடைய உடல்நிலை மோசமானதை அறிந்த மாரிமுத்து அவரை காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆன நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டவுடன் அவரை கார் ஓட்டி வந்தது தான் தவறு என தெரிவித்துள்ளார்.

அவர் உதவிக்கு யாரையாவது அழைத்து வந்திருந்தால் நிச்சயம் காப்பாற்றி இருக்கலாம். மாரடைப்பு ஏற்பட்டால் வேகமாக ஓடக்கூடாது, நடக்கக்கூடாது, கார் ஓட்டக்கூடாது. இவ்வாறு செய்தால் இதயத்தின் வலி இன்னும் அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.