DMK slams Kamal
DMK slams Kamal

DMK slams Kamal – சென்னை: சட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன் எனநடிகர் கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி.

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், அதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்று கூறினர். மேலும், தான் தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டு கொண்டார்.

தொடர்ந்து பேசிய கமல், ‘நான் சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.

அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு தான் வருவேன்’ என்று கூறி திமுக தலைவர் ஸ்டாலினை தாக்கி பேசினார்.

முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சினையில் தனது சட்டை கிழிந்து விட்டதாக ஸ்டாலின் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிழிந்த அந்த சட்டையுடநேயே அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவையும் சந்தித்து மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் இதை விமர்சனம் செய்துள்ளார்.

இதுமட்டுமின்றி, கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளிக்கையில் திமுக ஒரு ஊழல் பொதி மூட்டை என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை கமலஹாசன் இவ்வாறு தாக்கி பேசியுள்ளார்.